;
Athirady Tamil News

வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் வெற்றிடத்திற்கு முறையற்ற நியமனமா?..!!

0

நாளை 02.05.2018 வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் வழிகாட்டல் ஆலோனை ஆசிரியர் வெற்றிடத்திற்கு வழங்கப்படவுள்ள நியமனத்தில்,

சில குழறுபடிகள் உள்ளதாக உளவியல்பாட பட்டதாரிகள் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தனர்.

அவர்கள் அனுப்பிவைத்துள்ள குறிப்பில்,

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் ( Guidance & Counselling Teacher ) வெற்றிடத்திற்கு கணிசமான நியமனங்கள் வழங்கப்பட இருக்கின்றது.

இது முறையற்ற விதத்தில் இடம்பெற்று விடக்கூடாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

02.05.2018ல் நடைபெறவிருக்கின்ற நேர்முகத் தேர்வில் “வேறு வகையான பாடத்தினை நியமனமாகக் கொண்ட,

வேறுபாடங்களை பட்டப்படிப்பாகப் படித்து வெளியேறி தற்போது கடமையாற்றிக்கொண்டிருக்கின்ற ஆசிரியர்கள்,

வழிகாட்டல் ஆலோசனை பாட ஆசிரியர்களாக மாற்றம் செய்வதற்கு அழைக்கப்படவிருக்கின்றார்கள்.

ஆனால் இதன்போது தகுதியில்லாத, முறையற்ற விதத்தில் வேறுபாட ஆசிரியர்கள் உள்வாங்கப்படவும் உள்ளனர்.

என சில உயர்மட்ட அதிகாரிகளால் தகவல்கள் கல்விச்சூழலில் கசிந்துள்ளன.

இதனால் இப்போது பாதிக்கப்படப்போகும் நிலைமைக்கு உளவியல் பாடப் பட்டதாரிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக கடந்த ஆண்டில்(2017) இத்துறைசார் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் முன்னுரிமை அடிப்படையில் உளவியல் பட்டதாரி மாணவர்களே அதிகம் உள்வாங்கப்பட்டார்கள்.

இதனை உறுதி செய்வதாய் கல்வித்திணைக்களத்தின் அன்றைய சுற்றறிக்கை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இருப்பினும் ஏனைய துறைசார்ந்த பட்டதாரி மாணவர்களைப் புறந்தள்ளுவது இதன் நோக்கமல்ல.

என்றாலும் தற்காலத்திற்குப் பொருத்தமாக உளவியல் பாடத்தினைப் பிரதான பாடமாகக் கற்று வெளியேறிய பட்டதாரிகளே மேற்படி நியமனத்திற்குத் தகுதியானவர்களாகவும், சரியானவர்களாகவும் இருப்பார்கள் என்பதுடன்,

வழிகாட்டல் ஆலோசனை தொடர்பாக அடிப்படை அறிவைப் பெற்றவர்களாகவும் இவர்கள் காணப்படுகின்றார்கள் எனவும்,

இத்துறைசார்ந்து பலவருடங்களாகப் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களதும், சமூகப்பணியாளர்களதும் கணிப்பாகும்.

மாறாக, இந்நியமனத்தில் குறித்த உளவியல் துறைசார்ந்த பின்புலமுள்ள பட்டதாரி மாணவர்கள் கிடைக்கப் பெறவேண்டுமென்பதே முதன்மை நோக்கமாகவுள்ளது.

இவ்வாறு காலத்திற்கேற்ப மாறுபட்ட வகையில் உள்வாங்கப்படுகின்ற நியமனங்களுக்குப்பின்னால் அரசியலும், சமூகச்செல்வாக்கும், குறுகிய இலாபமும், தம்மைத் தக்கவைத்துக் கொள்ளுதலும் இருந்து வருகின்றன.

என்ற குற்றச்சாட்டினையும் முன்வைக்கின்றார்கள்.

வடமாகாணக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு……

01. பொருத்தமற்ற பாடத்துறை சார்ந்தவர்கள் இந்நியமனத்தில் உள்வாங்குவதைத் தவிர்க்க சேவைப் பிரமாணக்குறிப்பு, மற்றும் ஆட்சேர்ப்புத்திட்டம் என்பன முறையான மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு நிலையான இறுதி வடிவத்தைப் பெற ஆவண செய்ய வேண்டும்.

02. பாடசாலைகளில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்கின்ற மாணவர்களின் பிறழ்வு நடத்தைகளைப் பாடசாலை மட்டத்திலேயே கையாள நிபுணத்துவம் மிக்க ஆசிரியர்குழாமை உருவாக்க வேண்டும்.

03. பாடசாலைகளில் நிலவுகின்ற வழிகாட்டல்-ஆலோசனை ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு குறுக்கு வழிகளைக் கையாள்வதைத் தவிர்த்து, நீடித்த தீர்வாகிய பொருத்தமான பாடப் பின்புலமுள்ளவர்களை உள்வாங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. வேறுபாடத்திலுள்ளவர்கள் இந்நியமனத்திற்கு உள்வாங்குவதை முற்றாகத் தவிர்த்து நியமனக் கனவோடு காத்திருக்கின்ற, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நியமன ஆட்சேர்ப்பை விரைந்து நடைமுறைப்பபடுத்தி உளவியற் பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்கப்படவேண்டும்.

05. ஏற்கனவே இந்நியமனத்திலுள்ள ஆசிரியர்களின் வாண்மைத்துவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வாய்ப்புக்களை வழங்கவேண்டும்.

அவர்களுக்கான இடத்தை பொருத்தமற்றவர்களினால் நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

வடமாகாணக் கல்வித்திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இந்த விடயத்தில் தவறிழைத்துவிடக்கூடாது.

“தகுதியானது தகுதியானவர்களைச் சென்றடைய வேண்டும்”

என்ற நோக்குடனும், நேர்மையுடனும் இந்த நியமனங்களிற்கு உளவியல் பட்டம் கற்று வெளியேறிய மாணவர்களை உள்வாங்குதலே காலத்தின் தேவை ஆகும்.

என்று உளவியல் பாடப் பட்டதாரிகள் மாணவர்கள் சங்கத்தின் கலந்துரையாடலில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 14 =

*