;
Athirady Tamil News

சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்தவர் கைது..!!

0

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் இயங்கிவந்த உணவு விடுதி ஒன்றில் விடுமுறை தினமான நேற்று (30) மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விற்பனைக்கு தயாராக இருந்த ரின் பியர்கள் மற்றும் சாராய போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த உணவு விடுதியில் இருந்து சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான பியர் ரின்கள் மற்றும் சாராய போத்தல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை பொலிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரையும் மீட்கப்பட்ட சாராய போத்தல்களையம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*