;
Athirady Tamil News

முச்சக்கர வண்டி மோதியதில் பாதசாரி ஒருவர் பலி..!

0

கண்டி – பேராதெனிய வீதியின் விலியம் கோபல்லாவ மாவத்தை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கண்டி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − five =

*