;
Athirady Tamil News

வவுனியாவில் புரட்சிகர மேதின ஊர்வலம்..!! (படங்கள்)

0

புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் இன்று (01.05.2018) காலை 9.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி பஜார் வீதியூடாக கோரவப்போத்தானை வீதியுடாக ஏ9 வீதியினை வந்தடைந்து நகரசபை வீதியுடாக வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்தது.

இவ் ஊர்வலத்தின் போது கல்வியை விற்பனைப் பண்டம் ஆக்காதே , சைட்டம் வேண்டாம் , மக்களின் நிலங்களிருந்து இராணுவமே வெளியேறு , அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறை என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் பேரணியாக சென்றனர். இவ் பேரணியில் வவுனியா மாவட்ட சழூக ஆர்வளர்கள் , தொழிலாளர்கள் , புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் கலாச்சார மண்டபத்தில் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் பிரதீபன் தலமையில் இடம்பெற்ற இவ் பொதுக்கூட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா , சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் பூ.சந்திரபத்மன் , வீதி பராமரிப்பு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் க.மகேந்திரன் , இலங்கை தேசிய பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா இணைப்பாளர் ஆர்.சித்திரன் , அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உப தலைவர் செ.மதுரகன் , மூத்த தொழிச்சங்கவாதி ஹென்றி மகேந்திரன் , புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக செ.நந்தமோகன் , தேசிய கலை இலக்கிய பேரவை சார்பாக எஸ்.டொன்போஸ்கோ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + eighteen =

*