;
Athirady Tamil News

மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள்..!! (படங்கள்)

0

வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் நெடுந்தீவில் உள்ள ஏழு முன்பள்ளிகளிலும் ஆசிரியர்களாகக் கடமையாற்றும் பதினாறு பேருக்கும் சுயதொழில் மேற்கொள்ளும் நான்கு பேருக்குமாக இருபது துவிச்சக்கர வண்டிகளை 30.04.2018 அன்று நெடுந்தீவில் வைத்து வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசசபைத் தவிசாளர் பிலிப் பற்றிக் றொசான், பிரதேசசபை உறுப்பினர் சிந்தைகுலநாயகி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் அருள்ஜீவன், யேசுதாசன், புளோரன்ஸ் மேரி, பரமேஸ்வரி ஆகியோரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தனர்.

ஒரு துவிச்சக்கர வண்டியின் பெறுமதி பதினைந்தாயிரத்து இருநூறு ரூபாய்படி வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களம் கொள்முதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் பதிவுகளைப் படங்களில் காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 4 =

*