;
Athirady Tamil News

திருமண விழாவில் மணமகன் சுட்டுக்கொலை – நண்பன் வெறிச்செயல்..!! (வீடியோ)

0

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் வர்மா (24) என்பவருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமண சடங்கின் போது உறவினர்கள் சூழ சுனில் மணமேடையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென் சுனில் நெஞ்சில் கை வைத்து கீழே விழுந்தார். இதனை கண்ட உறவினர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் சுனிலை தூக்கி பார்த்த போது அவர் நெஞ்சில் குண்டு பாய்ந்திருந்தது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சுனிலை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. திருமண வீடியோவை பார்த்த போது சுனிலின் நண்பர் ராம் சந்திரா என்பவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. அதிக சத்ததுடன் பாட்டி ஒலித்ததால் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சுனிலின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மணமேடையில் மணமகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − one =

*