;
Athirady Tamil News

இந்தியாவில் கோர விபத்து – வடமராட்சி இளைஞன் உயிரிழப்பு..!!

0

இந்தியாவில் தமிழ்நாட்டில் நேற்றுக் காலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அதில் பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உறவினர்களைப் பார்ப்பதற்கு குறித்த இளைஞனும் தாயாரும் இந்தியா சென்றன.அங்கு உறவினர்களுடன் தமது தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற போது அதிவேகமாகப் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். வாகனத்தில் பயணம் செய்த தாயார் ஆபத்தான நிலையிலும், ஏனையவர்கள் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வாகன சாரதியும் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 16 =

*