;
Athirady Tamil News

சிறுமிகள் கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

0

நாட்டில் 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சிறுமி கற்பழிப்பு வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்களின் மூலம் விரைவாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் சுப்ரீம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டது.

இந்த அறிவிப்பு டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த மனுவில் ‘சிறுமிகளை கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்குகளை வழக்குப்பதிவு செய்ததில் இருந்து 6 மாதத்திற்குள் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டிருந்தார். #supremecourt #POCSOAct #highcourt

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + sixteen =

*