;
Athirady Tamil News

சிறுவனை நிர்வாணப்படுத்திய சிறுவர்கள்..!!

0

தனது கணினிக்கு, வீடியோ கேம் ஒன்றைப் பதிவேற்றம் செய்து கொள்வதற்காக, நண்பனுடைய வீட்டுக்குச் சென்ற 13 வயது சிறுவனொருவனை நிர்வாணப்படுத்தி, அந்தச் சிறுவன் கொண்டு வந்த கணினியில் வீடியோப் பதிவேற்றம் செய்து விட்டு, அவனது நண்பன் உட்பட நான்கு சிறுவர்கள் இணைந்து துர்நடத்தைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவமொன்று, மாத்தறை – கும்புறுப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும், சிறு வயதினர் அவர்களைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுவன் வழங்கிய தகவலுக்கமையவே, மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென, மேற்படி சிறுவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 13 – 16 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் நால்வரையும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*