;
Athirady Tamil News

பிரான்சில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் 400 பேர்: வெளியான தகவல்..!!

0

பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் 400க்கும் அதிகமானவர்கள் குறித்த தகவல் அதிகாரிகளால் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் துருக்கி மற்றும் லிபியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் 320 பேர் குறித்த தகவலும் பிரான்ஸ் அதிகாரிகளால் திரட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் வழக்கறிஞர் Francois Molins, குறித்த நவீன பயங்கரவாதம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் ப்ரீபெய்ட் அட்டைகள், நன்கொடைகள், அன்பளிப்பாக பணம் அளித்தல் மற்றும் இணையம் வாயிலாக சிறு தொகை அன்பளிப்பாக அனுப்புதல் உள்ளிட்டவை அடங்கும் என்றார்

இறுதியில் இவை அனைத்தையும் பிரான்ஸில் அல்லது ஏதேனும் ஒரு வெளிநாட்டில் வைத்து மொத்த தொகையாக மாற்றிக் கொள்கின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிக்கும் கும்பல் மீது சமீப காலமாக பிரான்ஸ் விசாரணை அதிகாரிகளின் பார்வை குவிந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பிரபல சிமெண்ட் உற்பத்தியாளர் ஒருவர் ஆயுத போராளிகளுக்கு பெரும் நிதி உதவி அளித்து வந்ததை உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டது.

தலைநகர் பாரிஸில் வியாழன்று நடந்த பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதற்கு எதிரான கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து சுமார் 80 அமைச்சர்களும் பயங்கரவாதம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற 500 பேரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 19 =

*