;
Athirady Tamil News

பிரித்தானியாவில் ஒரு நிமிடத்திற்கு இவ்வளவு அபராதமா? பைத்தியக்காரர் என்று திட்டி தீர்த்த நபர்..!!

0

பிரித்தானியாவில் பேருந்து நிலையத்தில் தெரியாமல் ஒரு நிமிடத்திற்கு காரை நிறுத்தியதால், அவருக்கு அபராத தொகையை பார்த்து அந்த நபர் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் தன் மனைவியுடன் ஷாப்பிங் சென்ற நபர் தனது காரை நிறுத்துவதற்காக இடத்தை தேடியுள்ளார்.

அப்போது அங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு நிமிடம் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின் இடத்தை தேடி பிடித்து காரை நிறுத்திவிட்டு, ஷாப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.வீடு திரும்பிய அவருக்கு ஒருவாரத்திற்கு பின்னர் West London-ன் Ealing council-ல் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் மிஸ்டர் டேவிட் நீங்கள் உங்கள் காரான Vauxhall Mokka-வை குறித்த பயணிகள் நிற்கும் பேருந்து நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 05.20.16லிருந்து 05.20.17 வரை நிறுத்தியுள்ளீர்கள்.

இது விதிமுறையை மீறிய நீங்கள் சுமார் ஒரு நிமிடத்திற்கு வங்கு காரை நிறுத்தியதால் உங்களுக்கு £110 அபராதம் விதிப்பதாக கூறி கடிதம் வந்துள்ளது.

இதைக் கண்ட ஆத்திரமடைந்த அவர் ஒரு நிமிடம் அங்கு இடம் தேடினேன் இது தவறா? பைத்தியக்காரர்களாக இருப்பர்கள் போல் தெரிகிறது என்று கூறி ஆத்திரமடைந்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 19 =

*