சிறுவனை பேருந்துக்கு வெளியே தூக்கி ஏறிந்த கொடூரன்: பகீர் வீடியோ..!!

சீனாவில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சிறுவனை கடுமையாக அடித்து தாக்கி பேருந்தில் இருந்து வெளியே தூக்கி எறிந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மேற்கு சீனாவில் உள்ள சுய்னிங் மாகாணத்தில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பேருந்தில் உள்ள பயணி மீது விளையாட்டு தானமாக தனது காலினால் இடித்து விளையாடியுள்ளான்.
ஆனால் திடீர் என ஆத்திரம் அடைந்த அந்த பயணி சிறுவன் என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக அவனை தாக்கி பேருந்தில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளார்.
இந்த எதிர்பாராத திடீர் சம்பவத்தால் திகைத்து போன பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் 21 வயது மதிக்கத்தக்க அந்த பயணியை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிறுவன் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்