;
Athirady Tamil News

என் அம்மாவை கொன்றுவிட்டேன்: பொலிசிடம் ஜாலியாக கூறிய மகள்..!!

0

அமெரிக்காவில் பெற்ற அம்மாவை கொலை செய்துவிட்டு பதட்டமில்லாமல் பொலிசாருக்கு போன் செய்து கூறிய மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த சுங் ஹூ கிம் (63) என்ற பெண் தனது தாயான சூக் சங் (90) என்பவருடன் பக்ஸ் கவுண்டியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை தாயுடன், சுங்குக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த சுங், சூக்கின் தலையை சுவற்றில் மோதியதோடு அங்கிருந்த கனமான பொருளால் அவரை அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் பொலிசாருக்கு போன் செய்த சுங், நான் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டேன், அதாவது என் அம்மாவை கொன்று விட்டேன் என கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த போது அங்கு சுங் ரத்த கறையுடன் இருக்க வீடு முழுவதும் ரத்தம் படிந்திருந்தது,இதையடுத்து சூக்கின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார், சுங்கை கைது செய்துள்ளார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*