;
Athirady Tamil News

லொட்டரி சீட்டில் பம்பர் பரிசு: நபரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்..!!

0

அமெரிக்காவில் உபேர் வாகன ஓட்டுனர் ஒருவருக்கு பயணி ஒருவர் லொட்டரி சீட்டை வெகுமதியாக அளித்தது, அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உபேர் டாக்ஸி ஓட்டுனராக இருப்பவர் ஜேம்ஸ். இவருக்கு பயணி ஒருவர் அளித்த லொட்டரி டிக்கெட்டில் பம்பர் பரிசு விழுந்துள்ளது.

சம்பவத்தன்று தனது வாகனத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சிறந்த சேவையை வழங்கியதாக கூறி 5 டொலருக்கான லொட்டரி டிக்கெட் ஒன்றை டிப்பாக வழங்கியுள்ளார்.

குறித்த லொட்டரியில் ஜேம்சுக்கு 30 டொலர் பரிசு விழுந்துள்ளது. அந்த 30 டொலருக்கும் அவர் லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து 6 வாரங்கள் இதேபோன்று டிக்கெட் வாங்கிய அவருக்கு பரிசு விழுந்துள்ளது. இந்த நிலையில் பம்பர் பரிசுக்கான டிக்கெடை வாங்கியுள்ளார் ஜேம்ஸ்.

அந்த டிக்கெட்டிலும் அவருக்கு பரிசு விழுந்துள்ளது. அதில் பம்பர் பரிசு தொகையான 140,000 டொலர்களை வென்றுள்ளார்.

குறித்த பணத்தில் தமது பெற்றோரிடம் இருந்து கடனாக பெற்ற தொகையை திருப்பி செலுத்துவதே முதல் கடமை என தெரிவித்துள்ள ஜேம்ஸ், எஞ்சிய பணத்தில் தமது வாகனத்தை நவீனப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − one =

*