;
Athirady Tamil News

கெட்ட எண்ணத்தோடு தன்னை பின் தொடர்ந்த ஆணிற்கு தகுந்த பதிலடி கொடுத்த பெண்..!!

0

அமெரிக்காவில் பாலிய துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை பெண் தன் கையால் பலமாக தாக்கியதால், அவர் அந்த இடத்தை விட்டு அலறி அடித்து ஓடியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த லீயானா கார் என்ற பெண் இந்தியா உட்பட பலவேறு நாடுகளுக்கு தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21-ஆம் திகதி 3 நாட்கள் பயணமாக ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த ஒரு நபர் கெட்ட எண்ணத்தோடு பாலிய துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளான்

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வராத காரணத்தினால், அழுதுள்ளார்.

அதன் பின் இவர்களை நம்பினால் நாம் தப்பிக்கு முடியாது என்று கூறி துணிச்சலாக முடிவெடுத்துள்ளார். அதாவது கையில் தன்னுடைய மொத்த பலத்தையும் சேர்த்து அந்த நபரின் கண்ணை பார்த்து குத்தியுள்ளார்

இதனால் அந்த நபரின் கண் தக்காளி பழம் போல் பழுத்துள்ளது, வலியால் அந்த நபர் அங்கிருந்து ஓடியுள்ளான்.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவனை அடித்ததால் தனது கைக்கு ஏற்பட்ட வலி மற்றும் காயம் எனவும் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் அந்த நபரை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*