;
Athirady Tamil News

மன்னாரில் வெகு சிறப்பாக அரங்கேறிய தொழிலாளர் தின நிகழ்வுகள்..!!

0

மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, பள்ளிமுனை, பனங்கட்டிக்கோட்டு ஆகிய கிராமங்களில் சிறப்பான முறையில் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது கடற்கரை பகுதியில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோழிக்க தேவாலயங்களில் மாலை மற்றும் மாலை நேரங்களில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

பேசாலை கடற்கரையில் மீனவர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட புனித சூசையப்பர் சிற்றாலயம், பேசாலை பங்குத்தந்தையினால் வைபவ ரீதியாக திறப்பு விழா செய்யப்பட்டு உலக தொழிலாளர் தின திருப்பலியினை அருட்தந்தையர்களான பெனோ அலெக்சாண்டர் சில்வா மற்றும் றெஜினோல்ட் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியின் முடிவில் புனித சூசையப்பரின் திருச்சொரூப ஆசீர் வழங்கப்பட்டதோடு, மீனவர்களின் தொழில் உபகரணங்களும் ஆசீர் வதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*