;
Athirady Tamil News

வெளியானது காலாவின் ‘செம்ம வெயிட்டு’ பாடல்..!! (வீடியோ)

0

ஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலிருந்து ‘செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஜூன் மாதம் 7-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கியூமா குரோஷி, சமுத்திரக்கனி, சம்பத், நானா படேகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

‘காலா’ படப் பாடல்கள் மே 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், அப்படத்தின் ‘சிங்கிள் டிராக்’ இன்று வெளியிடப்பட்டது. செம்ம வெயிட்டு… எனத் துவங்கும் இப்பாடலை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பாடல் வெளியான 5 நிமிடத்தில் 30 ஆயிரம் பேர் பாடலை கண்டு களித்துள்ளனர். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 11 =

*