;
Athirady Tamil News

தொழிலாளர்கள் தினத்தில் தகராற்றில் ஈடுபட்ட நகரசபை உறுப்பினர்..!!

0

சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினர் ஒருவர், நகரத்தின் பொதுச் சந்தையில் வியாபாரம் நடைபெற வேண்டும் எனக் கூறி இன்று (செவ்வாய்க்கிழமை) தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நகரசபை உறுப்பினர் தவிசாளருக்கு எதிராக இவ்விடயம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என அநாகரிகமான முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நகரசபையின் சந்தை வரி வசூலிப்பு உத்தியோகத்தர்களையும் தகாத வார்த்தைகளால் கண்டித்துள்ளார்.

சாவகச்சேரி வணிகர் கழகத்தினதும் சந்தை வியாபாரிகளதும் தீர்மானத்திற்கமைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஒற்றுமையாக தொழிலாளர் தின பேரணியில் பங்கெடுப்பதற்காக தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு நகரசபைத் தவிசாளர், இன்றைய தினம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை எனவும் அது தொழிலாளர்களின் உரிமை என்பதால் அதில் நகரசபை தலையிடமுடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*