;
Athirady Tamil News

பலாத்கார சம்பவங்களுக்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்தான் பொறுப்பு – உ.பி. பாஜக எம்எல்ஏ..!!

0

இதனிடையே, சமீபத்தில் நமோஆப் மூலம் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய பிரதமர் மோடி, தேவையில்லாத, சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி ஊடகங்களின் செய்திகளுக்கு மசாலா சேர்க்காதீர்கள் என அறிவுறுத்தி இருந்தார். ஆனால், பா.ஜ.க.வினர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர் சிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவிட்டதற்குப் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். பெண் குழந்தைகளை சுதந்திரமாக நடமாடவிடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை முறையாகப் பார்த்துக்கொள்ளாமல், கண்காணிக்காமல் விட்டுவிடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு சிறுமிக்கோ அல்லது சிறுவனுக்கோ 15 வயது வந்துவிட்டால், அவர்களின் நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இது பெற்றோரின் கடமையாகும். ஆனால், அப்படி செய்யாமல், அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். இதனால் தான் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. குழந்தைகளிடம் செல்போன்களைப் பயன்படுத்த தரக்கூடாது.

நான் மனிதர்களின் மனநிலையை ஒப்பிட்டுப் பேசுகிறேன். 3 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை யாரும் பலாத்காரம் செய்ய முடியாது. இதுபோன்ற குற்றச்சாட்டு தான் அவர் மீது (உன்னாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.) மீது சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சுரேந்திர் சிங் கூறினார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. #SurendraSingh #BJPMLA #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 2 =

*