;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை..!!

0

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பான போராட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

433 நாட்களாக எமது பிள்ளைகளை தேடி போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சர்வதேசமும் எமது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை, சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகிவந்த நவரட்ணம் நிசாந்தன் காணாமல் போன பிள்ளைகள் தொடர்பாக கூறிய கருத்து தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் எந்தவிதமான கருசனையும் காட்டவில்லை, என்பதுடன் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்றால் ஏன் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 10 =

*