;
Athirady Tamil News

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் அதிபர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!! (படங்கள்)

0

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இன்று காலை அதிபர்கள் கவனயிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிகை நிரப்பு அதிபர்கள் மற்றும் கடமை நிறைவேற்று அதிபர்களுமாக 40 அதிபர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து மிகை நிரப்பு அpபர்களாக கடமையேற்ற தம்மை நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்காத நிலையில் அதிபர்களுக்கான கொடுப்பனவுகள் பதவி உயர்வுகள் இடமாற்றங்களை கோர முடியாத நிலை தமக்கு உள்ளதாக தெரிவித்த அதிபர்கள் தமக்கு நிரந்தர நியமகத்தினை வழங்க ஆவண செய்யப்படவேண்டும் என தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இவ்வாறு அதிபர்களாக பணியாற்றியவர்கள் நிரந்தர நியமனங்களுக்கு உள்வாங்கப்பட்டதாக தெரிவித்த அதிபர்கள் தாமும் அவ்வாறு உள்வாங்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் விசுவாசமாக பணியாற்றிய நிலையில் தற்போது கல்வி அமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே தமக்கான நிரஙகத நியமனங்களை வழங்க ஆவண செய்ய வேண்டும் என கோரியே இன்று வலய கல்வி அலுவலகத்திற்கு மன்பாக அவர்கள் கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − seven =

*