;
Athirady Tamil News

ஆந்திராவில் பலத்த மழை- இடிதாக்கி 16 பேர் பலி..!!

0

ஆந்திர மாநிலம் குண்டூர், கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜய நகரம், கோதாவரி ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று இடியுடன் பலத்த மழை கொட்டியது.

பல இடங்களில் சூறாவளி காற்றுக்கு மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.

இடி-மின்னல் தாக்கி குண்டூர், விஜயநகரம், கிருஷ்ணா, கோதாவரி ஆகிய மாவட்டங்களில் இடி தாக்கி 16 பேர் பலியானார்கள். குண்டூரில் பனை மரம் சரிந்து விழுந்ததில் மோட்டார்சைக்கிள் சென்ற ஒருவர் பலியானார்.

விசாகப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமாகி விட்டனர். மின் கம்பங்கள் சரிந்ததால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கின.

நேற்று ஒரு நாள் பெய்த மழையால் 6 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

அங்கு சரிந்து விழுந்த மரங்கள், மின் கம்பங்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பலத்த மழை- சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள், நெற்பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 6 =

*