;
Athirady Tamil News

ஐக்கிய ஜனதா தளம் கட்சியியின் மூத்த தலைவர் உதய் நாராயண் சவுத்ரி ராஜினாமா..!!

0

பீகார் சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும், ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான உதய் நாராயண் சவுத்ரி கட்சியிலிருந்து விலகியதாக இன்று அறிவித்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார். நிதிஷ் அரசு தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக அவர் தெரிவித்தார். இதனால் விரைவில் கட்சியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று உதய் நாராயணன் சவுத்ரி கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இதுகுறித்து நிதிஷ் குமாரிடம் பேசிய சவுத்ரி, மாநிலத்தில் தலித் மக்கள் எதிராக கொடுமைகள் முடிவுக்கும் வரை கட்சியில் பணியாற்ற மாட்டேன் என கூறினார். சவுத்ரி தலித் மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். #UdayNarayanChaudhary #JDU #bihar #nithishkumar

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*