;
Athirady Tamil News

மோடியின் பார்முலா 2 ரெட்டிகள் + எடியூரப்பா – சித்தராமையா பதிலடி..!!

0

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய பிரசாரத்தின் போது காங்கிரஸ் முதல்- மந்திரி சித்தராமையாவை கடுமையாக தாக்கி பேசினார்.

சித்தராமையா 2 தொகுதிகளிலும், அவரது மகன் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதை 2+1 என்று விமர்சித்து இருந்தார். சித்தராமையா அரசுக்கு கொலைகள் செய்வது எளிது மற்றும் குடும்ப அரசியலை ஊக்குவிப்பதே காங்கிரசின் கலாச்சாரம் என்று மோடி தாக்கி பேசினார்.

இதற்கு சித்தராமையா பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கு உடந்தையாக இருந்தவர் என்பதால் பிரதமர் மோடி அதுபற்றி பேசுவதை தவிர்க்கிறார். அவர் 2+1 பார்முலா பற்றி பேசி இருக்கிறார். மோடியின் பார்முலா 2 ரெட்டிகள் +1 எடியூரப்பா. தேர்தல் வெற்றிக்காக அவர் இந்த பார்முலாவை பயன்படுத்துகிறார்,

ஊழலை ஒழிப்பதாக கூறும் பிரதமர் சுரங்க முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரெட்டி சகோதரர்களை பா.ஜனதாவுக்கு ஆதரவாக பயன்படுத்துவது ஏன்? முதல்-மந்திரி வேட்பாளரான எடியூரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.

எங்களுக்கு ஊழல் குறித்து பாடம் நடத்துகிறீர்கள். இது மாதிரியான கபட நாடகத்தை முதலில் நிறுத்துங்கள். கன்னடர்கள் ஒன்றும் காதில் தாமரை வைத்துக் கொண்டு சுற்றவில்லை.

தோல்வி பயத்தால் சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக பிரதமர் தெரிவித்து இருக்கிறார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி, வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டதற்கான காரணத்தை மோடி மக்களிடம் விளக்க வேண்டும்.

கர்நாடகத்தில் தீவிர பிரசாரத்தில் மோடி ஈடுபட்டாலும் பா.ஜனதா 60-70 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது.

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார். #KarnatakaElections2018 #Modi #Siddaramaiah

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 15 =

*