;
Athirady Tamil News

பிரித்தானியா விமானநிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்: கண்ணீருடன் சென்ற பெண்..!!

0

பிரித்தானியா விமானநிலையத்தில் காதலரை பிரிய முடியாமல் இளம் பெண் கண்ணீருடன் விடை பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பிலிப்பைன்சைச் சேர்ந்தவர் Christy Manganti இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தானியாவில் இருக்கும் தன்னுடைய சகோதரியின் குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக வந்துள்ளார்.

அப்போது இவருக்கு Badoo என்ற இணையதளத்தில் கடந்த நவம்பர் மாதம் Richard Brown என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேசி வந்த இவர்கள் நாளைடைவில் காதலர்களாக மாறினர்

அதன் பின் இருவரும் லிவிங் டூ கெதர் என்ற அளவிற்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

பிலிப்பைன்சில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்த Christy 6 மாத விசா மூலமே வந்துள்ளார். இதனால் அவர் மீண்டும் நாட்டிற்கு செல்லுவதற்கு நேரம் வந்ததால், அவர் மீண்டும் தன்னுடைய விசாவை இரண்டு ஆண்டுகள் புதுப்பித்து தரும் படி அங்கிருக்கும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்

ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி Christy தான் வரும் அக்டோபர் மாதம் பிரித்தானியாவைச் சேர்ந்தவரை திருமணம் செய்யப்போவதைப் பற்றியும் கூறியுள்ளார்.

அதற்கு அதிகாரிகள் இந்நாட்டில் இருந்து கொண்டே விசாவிற்கு அனுமதி கேட்டால் தரப்படமாட்டடாது.

பிலிப்பைன்ஸ் சென்று அங்கிருந்து என்ன காரணத்திற்காக பிரித்தானியா செல்லப் போகிறேன் என்பதை எல்லாம் விளக்கி விசா பெற்று வரும் படி கூறியுள்ளனர்

இதனால் Christy பிலிப்பைன்ஸ் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழி அனுப்புவதற்கு Richard Brown வந்துள்ளார்.

இருவரும் தங்கள் காதலை பல்வேறு விதமாக வெளிப்படுத்தினர். அதன் பின் தன்னுடைய காதலனை பிரியமுடியாமல் அவர் கண்ணீருடன் விமானநிலையத்திற்குள் சென்ற தருணம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஆறு மாத விசாவில் பிரித்தானியா வந்தவர் தற்போது அவருடைய வாழ்க்கை துணையை தேடியுள்ளதால், வாழ்க்கையே முற்றிலும் மாறியதாக கூறி தன் நண்பர்களிடம் மகிழ்ச்சியடைந்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + ten =

*