;
Athirady Tamil News

மட்டு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA)மே தினம்..!! (படங்கள்)

0

இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) மேதின ஊர்வலமும் மேதின கூட்டமும் பெரிய போரதீவு பற்று பிரதேசத்தில் ஆராம்பமாகிய ஊர்வலம் வெல்லா வெளி மாரியம்மன் ஆலய முன்திடலை சென்றடைந்து அங்கே பொதுகூட்டம் இடம்பெற்றது.

இவ்நிகழ்வில் கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள்,உறுப்பினர்கள், கூட்டமைப்பின் (TNA) பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புளொட் சார்பில் பா.உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் , மண்முனை மேற்கு பிரதேச பிரதி தவிசாளர் தோழர் பொன்னம்பலம் கேசவன், மட்டு மாநகர உறுப்பினர் தோழர் நிஸ்காந்தராஜா (சூட்டி) கட்சியின் ஏனைய உள்ளாட்சி உறுப்பினர்கள், தோழர்கள ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் உரிமையை வலியுறுத்தும் வாசகங்களை தாங்கிய அட்டைகளை தாங்கியும், தொழிலாளர் நிலையை சித்தரிக்கும் பல வேறு ஊர்திகளையும் காண முடிந்தது.

மட்டக்களப்பு மாவட்ட பேரணியையும், பொது கூட்டத்தையும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் ஒருமித்து ஒழுங்கமைத்ததன் பலன் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + fifteen =

*