;
Athirady Tamil News

ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளை கோட்டைவிட்ட முல்லை மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம்..!!

0

ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளை கோட்டைவிட்ட முல்லை மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம். ஆதாரங்களுடன் முன்வைத்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (வன்னி எம்.பி)

வேணாவில் ஆரம்ப சுகாதார நிலையம்,சுதந்திரபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கான நிதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் ஊடாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வழிப்பு, மீழ்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் 2017 இல் ஒதுக்கப்பட்டிருந்தும், அதை முல்லை மாவட்ட சுகாதார திணைக்களம் கோட்டை விட்டுள்ளது.

இது பற்றி பல தடவைகள் மாவட்ட,பிரதேச அபிவிருத்திகுழு கூட்டடங்களில் நிதியை பாவிக்குமாறு நான் அறிவுறுத்தியிருந்தும், சரியான முகாமைத்துவம் தெரியாததால் முல்லை மாவட்ட சுகாதாரதிணைக்களம் அதை உரிய முறையில் பாவிக்கவில்லை. கடிதங்களை மாற்றி மாற்றி எழுதுவதால் எமது யுத்தத்தால் அழிவடைந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதை உரிய சுகாதார திணைக்கள அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அவர்களுக்கு பிரதேச செயலர் எழுதிய கடிதம் ஒன்றில் கட்டடம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டதை புதிதாக கட்ட வேண்டும் எனவும்,புதிதாக அமைக்க வேண்டும் என்பதை திருத்தம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டதை சுட்டி காட்டி இவ்விடயம் முரண்பாடாக உள்ளதால் நிதி பாவிக்கமுடியாத நிலையில் திருப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் பொறுப்பெடுக்க வேண்டும்.

இன்று 01.05.2018 ஒரு பத்திரிக்கை செய்தி பார்தேன் மக்கள் வேணாவில் பிரதேசத்தில் ஒரு ஆரம்ப சுகாதாரநிலையம் கோரி நிற்க்கின்றார்கள். இந்தநிலையை முல்லை மாவட்டத்தில் சீர் செய்ய வடமாகாண சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிநிற்கின்றேன். தொடர்ந்தும் முல்லை மாவட்ட சுகாதார திணைக்களத்தின் அசமந்தங்களை பொறுக்கமுடியாது. என குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 6 =

*