;
Athirady Tamil News

‘மில்கோ’ நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்..!! (படங்கள்)

0

கொட்டகலையில் அமைந்துள்ள மில்கோ நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டம் கொட்டக்கலை மில்கோ பசும்பால் சேகரித்து பதனிடும் நிறுவன வளாகத்தில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

தமது பால் விற்பனைக்கான தொகையினை மாதத்திற்கு இரண்டு முறைப்படியே குறித்த நிறுவனம் வழங்குவதாகவும், அந்தத் தொகையும் தாமதிக்கப்படுவதாகவும் குறித்த பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தமது கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதால் இது தொடர்பில் உரிய நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தே இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். அத்துடன் அரசாங்கம் இந்த விடயங்களைக் கவனத்தில் எடுக்கவேண்டுமெனவும் தெரிவித்தனர்.

குறித்த போராட்டத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eleven =

*