;
Athirady Tamil News

புலிகளின் ஆயுதங்களைத் தேடி மீண்டும் அகழ்வுப்பணி..!! (படங்கள்)

0

கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கிளிநொச்சிப் பொலிஸாரால் இன்று (புதன்கிழமை) காலை முதல் குறித்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன் ஒன்று, குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அறிவியல்நகர் பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் காணப்படுவதாக ஏற்கனவே அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் எவ்வித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

குறித்த அகழ்வுப்பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதவான், நீதிமன்ற பதிவாளர், கிராம சேவையாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*