;
Athirady Tamil News

டெல்லியில் திடீர் மழை… டெல்லி ராஜஸ்தான் ஆட்டம் தாமதமாகிறது..!!

0

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராக இருந்தது. இந்த நிலையில் திடீரென்று மழை பெய்யத் துவங்கியதால் ஆட்டம் தாமதமானது. ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசனில் இதுவரை 31 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 ஆட்டங்களில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஸ்கோர் Match 32 – START DELAYED DEL VS RAJ Inspection at 9:10pm local time மேலும் பார்க்க ஐபிஎல் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் சாம்பியனாகும் கனவுடன் களமிறங்கியுள்ளது. இதுவரை ஒருமுறைகூட பைனல்ஸ் நுழையாத டெல்லி அணி இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் களமிறங்கியுள்ளது. கேப்டன் பதவி போச்சு டெல்லி அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். அதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனானார்.

powered by Rubicon Project கேப்டனை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே, இரண்டாண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட, துவக்கத்திலேயே ராஜஸ்தான் அணி கேப்டனை இழந்தது. அதையடுத்து அஜிங்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் 7ல் மூன்று வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

வாழ்வா சாவா போட்டி இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதின. மழை குறுக்கிட்ட அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது. இனி நடக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலையில் இரு அணிகள் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி என்பது, இரு அணிகளுக்கும் வாழ்வா – சாவா என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. ராஜஸ்தான் பேட்டிங் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராக இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று மழை பெய்யத் துவங்கியதால், ஆட்டம் தாமதமானது. டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதலில் விளையாடிய ஆட்டத்திலும் ராஜஸ்தான் 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஜெய்ப்பூரில் நடந்த அந்த ஆட்டத்தில் மழை பெய்ததால், டெல்லிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் டெல்லி 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் 10 ரன்களில் வென்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*