;
Athirady Tamil News

யாழ். தெல்லிப்பழை சந்தியில் நடிகர் தல அஜித்துக்கு பிறந்தநாள் விழா..!! (முகநூலில் இருந்து)

0

சைவமும் தமிழும் சிறப்புற்று விளங்கிய ஒரு மண்ணில் பண்பாடு, கலாச்சாரம் மறந்து ஒரு நடிகனுக்கு தெருவில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, போக்குவரத்தை இடையூறு செய்து பிறந்த நாள் விழா செய்த தெல்லிப்பழை இளைஞர்களை எப்படி சொல்ல.?

தாய், தந்தை, சகோதரர்களுடைய பிறந்த திகதி கூட தெரியுமோ தெரியவில்லை இந்த இளைஞர்களுக்கு. ஒரு நடிகனுக்கு இரசிகனாக இருப்பது தவறில்லை ஆனால் இந்த மாதிரி கலாசாரம் எமது மண்ணுக்கு பொருத்தமில்லை.

உமாமகேஷ்வரன்(முகுந்தன் ) என்ற மாபெரும் போராளியை பெற்ற மண், சினிமா மோகத்துக்குள் யாழ் இளைஞர்கள் மூழ்கி விட்டார்கள். இன்று இந்த இளைஞர்கள் போல வாழ ஆசைப்பட்டு இருந்திருந்தால் பல போராளிகளை இழந்து இருக்க மாட்டோம். தியாக தீபம் திலீபனை ஒரு வைத்தியராக பார்த்து இருக்கலாம். அவர்களின் உயிர் தியாகம் பயனற்றது போகுதோ என கவலையாக உள்ளது.

எத்தனையோ மேதைகளை இழந்து உள்ளோம் மண்ணையும் பண்பாட்டையும் மீட்க .இன்று இளைஞர்கள் போதையில் வாகனம் செலுத்தியே உயிரை விடுகிறார்கள். பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இந்த மண்ணின் மரபுகள் சிதைந்து போகாமல் வளர்த்து எடுங்கள்.

தியாகிகளுக்கு வானுயர்ந்த கட்டவுட்டுக்கள் வைக்கப்பட்ட மண்ணில் தமிழ் பண்பாட்டை அழிப்பவர்களுக்கு கட்டவுட். மாற்றம் தேவை. ஒரு மாணவன் அநீதியை கண்டு பொங்கியெழுந்தானே அவனை மறந்தோம், அந்த தியாகிக்கு சிலை வையுங்கள் நாடெங்கும். வீர வேங்கை பொன். சிவகுமார் எங்கள் ஹீரோ என்று துதி பாடுங்கள். மண்ணின் மைந்தன் இவரெல்லவோ. இவரே எங்கள் நாயகன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 18 =

*