;
Athirady Tamil News

வெசாக் விடுமுறை நாளில் மதுபான விற்பனை செய்தவர் கைது..!! (படங்கள்)

0

துக்குடியிருப்பு பரந்தன் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இயங்கிவந்த றெஸ்ரோறன்ட் ஒன்றில் நேற்றுமுன்தினம் 30.04.2018 விடுமுறை தினமான நிலையில் மதுபான விற்பனை இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த கடைப்பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் அங்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியுள்ளதுடன் விற்பனை செய்தவரை கைதுசெய்துள்ளதுடன் விற்பனைக்கு தயாராக இருந்த ரின் பியர்கள் மற்றும் சாராய போத்தல்களையும் மீட்டுள்ளார்கள்.

இன்னிலையில் வெசாக் விடுமுறை நாளில் நாடெங்கும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான வியர் ரின்கள் மற்றும் சாராய போத்தல்களை பொலீஸார் மீட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை பொலிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரையும் மீட்கப்பட்ட சாராய போத்தல்களையம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 15 =

*