;
Athirady Tamil News

அவுஸ்திரேலியா பல்கலைகழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பழம்..!!

0

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் திடீரென்று ஏற்பட்ட துர்நாற்றத்தின் காரணமாக அதன் மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தில் ஆபத்தான வேதிப்பொருட்கள் பல இருக்கும் என்பதால் ஏதேனும் விஷ வாயு லீக் ஆகியிருக்கலாம் என்னும் அச்சம் ஏற்பட்டதாலேயே சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மாஸ்க் அணிந்த நிபுணர்கள் உட்பட சுமார் 40 தீயணைப்புப் படையினர் விரைந்துவந்து எங்கிருந்து துர்நாற்றம் வீசுகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக கட்டிடம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்

பின்னர் அலமாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அழுகிய துரியன் பழம் ஒன்றிலிருந்து வரும் நாற்றம் அது என்பது தெரிந்தபின்தான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

கட்டிடத்தின் மைய ஏர் கண்டிஷனரின் மூலமாக அந்த துர்நாற்றம் கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
துரியன் என்பது ஒரு தென் கிழக்கு ஆசிய பழ வகையாகும்.

பல வெப்ப மண்டல நாடுகளில் விரும்பி உண்ணப்படும் இனிப்பும் மென்மையுமான அந்தப் பழம், டர்பெண்டைன், வெங்காயங்கள் மற்றும் அழுக்கு சாக்ஸ் ஆகியவற்றின் நாற்றங்களின் கலவையான ஒரு வாசனை கொண்ட பழம் என வர்ணிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 9 =

*