;
Athirady Tamil News

இந்திய, சீன ராணுவங்கள் இடையே நேரடி தொலைபேசி சேவை..!!

0

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சீனா சென்று இருந்தார். அங்கு உள்ள வூகன் நகரில் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எல்லை பாதுகாப்பு விஷயத்தை பொறுத்தமட்டில், இரு தரப்பு ராணுவங்கள் இடையே தகவல் பரிமாற்றங்களை வலுப்படுத்திக் கொள்வது, நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்திய சீன ராணுவங்கள் இடையே தகவல் பரிமாற்றத்துக்காக நேரடி தொலைபேசி சேவை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மிக நீண்ட காலமாக இருந்து வருகிற கோரிக்கை ஆகும்.

இது தொடர்பாக சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ ஏடு வெளியிட்டு உள்ள செய்தியில், “இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, தங்கள் ராணுவங்கள் இடையே தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஹாட்லைன் தொலைபேசி சேவையை உருவாக்குவது என சம்மதம் தெரிவித்து உள்ளனர்” என கூறி உள்ளது.

மேலும் இரு நாட்டு ராணுவங்களும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், இது குறித்து தத்தமது ராணுவத்துக்கு உத்தரவிடுவது எனவும், மோடியும், ஜின்பிங்கும் உடன்பட்டு உள்ளனர் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. நேரடி தொலைபேசி சேவை, இருதரப்பு நம்பிக்கை வளர்க்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + four =

*