;
Athirady Tamil News

ராஜஸ்தானில் கனமழை, பலத்த காற்றுக்கு ஒரேநாளில் 10 பேர் பலி..!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு 10 பரிதாபமாக பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதோடு பலத்த காற்றும் வீசுவதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் மழையினால் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் சரிந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

இந்நிலையில், கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி நேற்று ஒரேநாளில் 10 பரிதாபமாக பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல்பூர் பகுதியில் இரண்டு பேரும், ஆல்வார் பகுதியில் இரண்டு பேரும், பாரத்பூர் பகுதியில் 6 பேரும் கனமழை மற்றும் காற்றினால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். #RajasthanRains #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*