;
Athirady Tamil News

வவுனியாவில் இரு வேறு வீதி விபத்துக்கள்..!! (படங்கள்)

0

வவுனியாவில் இன்று A9 வீதியில் இரு வேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று பிற்பகல் 4மணியளவில் யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று கனகராயன்குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மாலை 5மணியளவில் யாழ். நோக்கி தேங்காய்களை ஏற்றி சென்ற லொறி ஒன்று ஓமந்தை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.

குறித்த விபத்திலும் எதுவித காயங்களும் இன்றி பயணிகள் தப்பித்ததாக தெரிவிக்கின்றனர்.

இரு விபத்து சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + seventeen =

*