ரெயில் கழிவறை பைப் தண்ணீரில் டீ தயாரித்த புகார் – கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!!

ரெயில் பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த ரெயில்வே கேண்டீன் ஊழியர் ஒருவர் ரெயில் கழிவறையில் இருந்து டீ கேன்களில் தண்ணீர் பிடித்து ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்கிறார். அவற்றை வாசலில் நின்ற மற்றொரு ஊழியர் பெறுகிறார்.
இதன்மூலம் கழிவறையில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடித்து டீ தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இனி ரெயிலில் யாராவது டீ குடிப்பார்களா? என்ற கேள்வியும் சமூக வலைத்தங்களில் பரவத் தொடங்கியது. பலர் ரெயில்வே அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினர்.
இந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் சென்னை – ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. இத்தகவலை தெற்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. #RailwayVendon #TrainToilet