;
Athirady Tamil News

தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

0

இந்த பரபரப்பான சூழ்நிலையில், காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு காரணமாக கர்நாடக தேர்தலையும், பிரதமரின் பிரசாரப் பயணத்தையும் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று கூறி கூடுதல் அவகாசம் கேட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும், இதில் அரசியல் காரணம் உள்ளதா என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டது. மேலும், மத்திய அரசு கூறும் காரணங்களை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

அதேசமயம், தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர். பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CauveryIssue #CauveryMangementBoard #CauveryDraftScheme

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − nine =

*