முகமூடி அணிந்த மர்ம நபர்கள் எரிபொருள் நிலையத்தில் கொள்ளை..!!

பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனவில, மாகந்துர பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் தமது முகத்தை அடையாளம் தெரியாத வகையில் மறைத்த நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பணியாளர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து சுமார் 70,000 ரூபாவை கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொள்ளைச் சம்பவம் இன்று (03) அதிகாலை 12.30 மணியிலிருந்து அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.