;
Athirady Tamil News

எமது ஒற்றுமை குறைந்துபோனால் தமிழினம் மீண்டும் காட்டி கொடுக்கப்படும்- சி.சிவமோகன்..!!

0

எமது ஒற்றுமை குறைக்கப்பட்டு விட்டால் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட்டு தமிழினம் பாரிய அழிவிற்கு சென்றுவிடும் வன்னி எம்.பி. சி.சிவமோகன் எச்சரிக்கை.

2015 முற்பட்ட காலத்தில் தமிழன் அடித்து நொறுக்கப்பட்டான். எவற்றினையும் வெளிப்படையாக செய்யவும் முடியாது, செயற்படவும் முடியாது. தமிழன் எல்லா பக்கமும் பிரிந்து நின்றதால் அடிமைப்படுத்தப்பட்டான். 2015 க்கு பின் தனது பலத்தினை ஒற்றுமையின் வழியாக காட்டினான் ஆதனால் அரசாட்சியையே மாற்றினான்.
இன்று 2015 க்கு முன் இருந்த போல் அல்ல இலகுவில் யாரும் தமிழனில் கை வைத்துவிட முடியாது.

கண்டியில் முஸ்லீம்கள் நான்கு துண்டாக பிரிந்து நின்றதால் சிங்கள இராணுவம் மற்றும் காவல் துறையினர் முன் அவர்களின் கடைகள், வீடுகளை அடித்திடித்தும் தீ மூட்டியும் நாசமாக்கினர். ஏன் அங்கு தமிழன் இல்லையா? அப்போ ஏன் ஒரு தமிழனில் கூட கை வைக்கவில்லை? காரணம் தமிழன் இன்று ஒற்றுமையாக இருக்கின்றான் அவனில் கை வைத்துவிட்டால் அது பாரதூரமாகிவிடும்.

எனவே தமிழன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இல்லை முஸ்லீம்களின் நிலைதான் எமக்கும் ஏற்படும் என 01.05.2018 அன்று புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் திருவிழாவினை முன்னிட்டு உதயசூரியன் நாடக குழுவினரால் நடாத்தப்பட்ட கலைநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது வன்னி எம்.பி.சி.சிவமோகன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + fifteen =

*