;
Athirady Tamil News

வவுனியா வடக்கு வலயத்தின் விளையாட்டு நிகழ்வுகள் 2018..!! (படங்கள்)

0

வவுனியா வடக்கு வலயத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான விழையாட்டு நிகழ்வுகள் ஓமந்தை மத்திய கல்லூரியில் இன்று (03) கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா வடக்கை சேர்ந்த 19 பாடசாலைகள் பங்குபற்றிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.அகிலேந்திரன் கலந்துகொண்டு நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து வெற்றி பெற்ற விழையாட்டு வீரர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

தேசியக்கொடி மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் மாணவர்களது அணிநடையினை அதிதிகள் ஏற்றுக்கொண்டதுடன், ஒலிம்பிக் சுடரேற்றல் நிகழ்வை தொடர்ந்து வீரர்கள் மற்றும் நடுவர்களின் சத்தியப்பிரமாணம் எடுத்தல் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ்விழையாட்டுப் போட்டியில் கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
விழையாட்டு நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன், பிரதி கல்வி பணிப்பாளர்களான திருமதி மாலதி முகுந்தன், திருமதி தேவிகா உமாதேவன், திருமதி சுகந்தி ஜெய்தேவ், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன், நெடுங்கேணி பிரதேச செயலாளர் க.பரந்தாமன், ஆசிரிய ஆலோசகர் து.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 14 =

*