;
Athirady Tamil News

குளவி தாக்குதல் ஊடகவியலாளர் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

0

வவுனியாவில் குளவி தாக்கதலுக்கு உள்ளாகிய ஊடகவியலாளர் உட்பட ஐவர் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (3) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா இரட்டைபெரியகுளம் பரக்கும் மகா வித்தியாலயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நான்கு பேரும் குழவி தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரும் குளவி கொட்டுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இக் குளவி தாக்குதல் குறித்து பாடசாலையின் அதிபர் எம்.நந்தசேன தெரிவிக்கையில்
கடந்த 29 மார்ச் 2018 இல் எமது பாடசாலையில் குளவி கொட்டியதில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்றிருந்தார்.

குளவித்தாக்குதல் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் போன்றவற்றிற்கு தகவல் வழங்கியபோதிலும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தியாலேயே இன்று இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பாடசாலையிலிருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில் மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*