;
Athirady Tamil News

சுதுமலை தெற்கு அம்பாள் சனசமூகநிலைய கலையரங்கதிறப்பு விழா..!! (படங்கள்)

0

சுதுமலை தெற்கு அம்பாள் சனசமூகநிலைய கலையரங்கதிறப்பு விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவி மற்றும் சுதுமலை ஊரவர்களின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட சுதுமலை தெற்கு அம்பாள் சனசமூகநிலைய கலையரங்கதிறப்பு விழா இன்று 03.05.2018 வியாழக்கிழமை நிலையத்தலைவர் ம.ஜெயமோகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு அரங்கத்தினை நாடாவெட்டித்திறந்து வைத்தார். நிகழ்வின் கௌரவ விருந்தினராக வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபைத்தலைவர் அ.ஜெபநேசன், வட்டார உறுப்பினரும், வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபை உபதலைவருமான ஆ.சி.கணேசவேல், கிராம அலுவலர் ஆர்.கே.ரட்ணராஜா, முன்னாள் மானிப்பாய் கிறீன் வைத்தியசாலை பொறுப்பதிகாரி சி.நாகையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சனசமூகநிலையத்தின் 49ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிலையத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன் , மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபைத்தவிசாளர், உப தவிசாளர், விருந்தினர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*