;
Athirady Tamil News

வவுனியாவில் இரத்ததான நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா, பண்டாரிக்குளம், உக்கிளாங்குளம் பிரஜைகள் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று (03) நடைபெற்றது.

பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பிரஜகள் பொலிஸ் குமு ஆண்டு தோறும் ஒமுங்கு செய்து நடைமுறைப்படுத்தும் இரத்ததான முகாம் பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்தி சங்கமண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வந்த இரத்ததான நிகழ்வு இம்முறையும் இக்கிராமத்தின் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றதுடன் பலரும் முன்வந்து இரத்த தானம் செய்திருந்தனர்.

இதில் கிராம அலுவலர், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், பிரஜைகள் பொலிஸ் குழு உறுப்பினர்கள் மற்றும் பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + one =

*