;
Athirady Tamil News

20 லட்சம் பணத்தால் கனேடிய நபருக்கு நேர்ந்த கதி..!!

0

ஒன்றாரியோவில் நபர் ஒருவர் வங்கியில் 30,000 டொலர் செக்கை மோசடி செய்த காரணத்தால், வட்டியுடன் சேர்த்து அந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Donald Marshall என்ற நபருக்கு Nissan dealership-இல் இருந்து அவரது பெயர் மற்றும் விலாசத்தில், 30,319.03 டொலர் செக் வந்துள்ளது.

இந்த செக் கைக்கு கிடைத்தவுடன் சந்தோஷம் அடைந்த டொனால்ட், தனது கனவு நிறைவேறிவிட்டது என நினைத்துள்ளார். அந்த பணத்தை கொண்டு, கார் வாங்கியுள்ளார். மேலும் தொண்டு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு, தனக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கியுள்ளார்.

மேலும், உடல்நலக்குறைவால் Nova Scotia- இல் இருக்கும் தனது தந்தையையும் சென்று பார்த்துவிட்டு வந்துள்ளார். ஒரு மாதத்திற்குள் இவரது அனைத்து பணமும் செலவழிந்துவிட்டது. இந்நிலையில் தான் இவருக்கு அதிர்ச்சியான தகவல் வங்கியில் இருந்து வந்துள்ளது.

செக் மோசடி நடந்துள்ளது என்றும் உடனடியாக வட்டியுடன் இந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டொனால்ட், வங்கி அதிகாரிகளிடம் சென்று, நான் பணக்கார நபர் கிடையாது என்னால் இவ்வளவு பணத்தையும் செலுத்த இயலாது.

எனவே, எனக்கு உதவி செய்யுங்கள் என கோரியுள்ளார். ஆனால், ஒரு செக் வந்தவுடன் அது எங்கிருந்து வந்தது என விசாரிக்காமல் அதனை செலவு செய்தது உங்கள் குற்றம் என வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + one =

*