;
Athirady Tamil News

ஒடிசாவில் புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!!

0

ஒடிசாவின் பொம்மிகால் பகுதியில் புதிதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இரவு நேரத்திலும் அங்கு கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்தது. சுமார் 8 பேர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த பாலத்தின் இடிபாடுகளில் இருவர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி செய்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுந்தர்கார் பகுதியை சேர்ந்த அஜய் உமிசா (38) என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இன்று விபத்து நடந்த பகுதிக்கு அருகில் நடைபெற்ற மற்றொரு பாலம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பத்து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Odishaflyovercollapse

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*