;
Athirady Tamil News

கார்த்தி சிதம்பரத்திடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தலாம்- ஐகோர்ட்டு உத்தரவு..!!

0

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் வெளிநாடுகளில் செய்த முதலீட்டை மறைத்ததாக கருப்பு பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘வெளிநாட்டு முதலீடு மற்றும் சொத்துக்கள் குறித்த எந்த ஒரு தகவலையும், கார்த்தி சிதம்பரம் மறைக்கவில்லை. வருமான வரிக்கணக்கு தாக்கலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்’ என்று வாதிட்டார்.

வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரிடம் விளக்கம் கேட்டு மட்டும் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரத்திடம் வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் விசாரணையை தொடங்கலாம். அதேநேரம், கருப்பு பண தடை சட்டத்தின் கீழோ அல்லது வருமானவரிச் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்போது, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை முதன்மை இயக்குனர், வருகிற ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 4 =

*