பொதுநலவாய பதக்க வீரர்களுக்கு வீடுகள்..!!

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளில் சாா்பாக கலந்து கொண்டு பதங்களைப் பெற்ற 6 வீரா்களுக்கும் கொழும்பில் 6 வீடுகள் கையளிக்கப்பட்டன.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா, தலைமை அமைச்சர் ரணில்
விக்கிரமசிங்க , வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச ஆகியோரால் வீடுகளுக்கான திறப்புகள் மற்றும் பத்திரங்கள் வீரர்களிடம் கையளிக்கப்பட்டன.
பளு துாக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திக்க திசாநாய்க்க, வென்கலப் பதக்கம் வென்ற ஜே.ஏ.சீ.லக்மால், மற்றும் பீ.டி.ஹன்சனிகோமஸ், மகளிா் குத்துச் சன்டையில் பதக்கம் வென்ற அனுசா கொடிதுவக்கு, வென்கலபதக்கம் வென்ற திவங்க ரணசிங்க .மற்றும் இசான் செனவிரத்தின பண்டாரா ஆகிய வீரா்களுக்கே வீடுகள் கையளிக்கபட்டன.