;
Athirady Tamil News

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது..!!

0

பொரள்ள, மெத்சர உயன பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபரான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரள்ள பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மேல் மாகாண போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − six =

*