;
Athirady Tamil News

முதலமைச்சரின் கட்சியில் முதல் ஆளாக சேர வேண்டும் என்ற குறுகிய நோக்கம் எனக்கில்லை – ஜி.ரி.லிங்கநாதன்..!! (வீடியோ)

0

முதலமைச்சரின் கட்சியில் முதல் ஆளாக சேர வேண்டும் என்ற குறுகிய நோக்கம் எனக்கில்லை என்று வடமாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வடமாகாண உறுப்பினரின் கோவில்குள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்இ

வடமாகாணத்திலே சுகாதார தொண்டர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள்இ தொண்டர் ஆசிரியர்கள்இ பட்டதாரிகள்இ காணாமல் போனவர்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டு வருகின்ற நிலையில் பல நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்ட சுகாதார தொண்டர்களின் பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

மேலும் அண்மையில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் கூட இவர்களினை கருத்தில் கொள்ளவில்லை. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் அமைச்சரவை தீர்மானம் எடுத்து அதனை ஆளுனரிடம் வழங்குவதன் மூலமாக ஆளுனரினால் அவ்விடயத்தினை மத்திய சுகாதார அமைச்சரிடம் சிபார்சு செய்ய முடியும்.
இதுதொடர்பாக எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் வினைத்திறனாக செயற்படும் பட்சத்தில் தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு வழங்கியது போன்று சுகாதார தொண்டர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

வடக்கு மாகாணத்தின் அரசியல் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஒரு கட்சிக்கும் அல்லது கட்சியில் இருக்கின்ற ஒரு சிலருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இருக்கின்ற பிரச்சனையானது இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே சவால் விடுகின்ற பிரச்சனையாக சொல்லப்படுகின்றது. முதலமைச்சர் முதலில் கட்சியை ஆரம்பிக்கட்டும் அவருடன் யார் யார் நிற்கின்றார்கள் என்று பார்ப்போம். என்னைப்பொறுத்த வரை முதலமைச்சர் கட்சி தொடங்குகின்றார் என்றவுடன் முதல் ஆளாக நான் போய் நிற்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் எனக்கில்லை.

இதில் தமிழ் மக்களை பொறுத்தவரை எல்லா கட்சிகளும் ஒர் அணியில் இருக்க வேண்டிய தேவையிருக்கின்றது. ஒரு கட்சிக்கு இன்னுமொரு கட்சி கூறினால் கேட்காது. ஆகவே தமிழ் மக்கள்தான் இதற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இருப்பதை பிரிக்காமல் பிரிந்திருக்கின்ற உதிரிகளாக இருக்கின்ற எல்லா தமிழ் கட்சிகளையும் ஒன்றாக இணைத்து செயற்படுவதுதான் எங்களிற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*